2009-02-05 15:05:06

பிப்ரவரி 6 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி.891 – கான்ஸ்டாண்டிநோபிள் பிதாப்பிதா புனித முதலாம் பெரிய போசியுஸ் இறந்தார்.

1819 – சர் தாமஸ் ஸ்டாம்போர்டு ராப்லெஸ் சிங்கப்பூரை கண்டுபிடித்தார்..

1911- அமெரிக்க ஐக்கிய நாட்டு 40வது அரசுத்தலைவராகிய ரொனால்டு ரேகன் பிறந்தார்

1922 – கர்தினால் அக்கிலே ராத்தி திருத்தந்தை 11ம் பத்திநாதராக நியமனம் பெற்றார்

1998 – வாஷிங்டன் தேசிய விமானநிலையம் ரொனால்டு ரேகன் விமானநிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

பெண் பிறப்பு உறுப்பு முடமாக்கப்படுவதற்கெதிரான சர்வதேச தினம்

பிப்ரவரி 6 புனித கொன்சாலோ கார்சியா விழா. 1556 ல் மும்பையில் பாசின் என்ற இடத்தில் பிறந்த இவர் ஜப்பானில் பிரான்சிஸ்கன் சபையின் துணைச் சகோதரராகச் சேர்ந்தார். அங்கு சமையல் வேலைகள் தவிர நோயாளிகளையும் சந்தித்து ஆறுதல் அளித்து வந்தார். ஜப்பானில் வேதகலகம் ஏற்பட்ட போது கொல்லப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.