2009-02-04 09:38:45

மெக்சிகோ நாடு ஒரு நிறைவைத் தருவதாய் உள்ளது என்கிறார் கர்தினால் பெர்தோனே.


பல்வேறு பிரச்னைகளை சுமந்து நின்றாலும் மெக்சிகோ நாடு விசுவாசமும் பக்தி முயற்சிகளும் அதிகம் கொண்டதாய் சிறந்து விளங்குவதாக அறிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே.

அண்மையில் மெக்சிகோ நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பியதைத் தொடர்ந்து 'அவனீரே' என்ற இத்தாலியத் தினத்தாளுக்குப் பேட்டியளித்த கர்தினால், தேவ அழைத்தல்களை அதிகமாகக் கொண்டு மெக்சிகோ தலத்திருச்சபை இளமையுடன் உள்ளது என்றார்.

பெரும் நம்பிக்கையுடன் வாழும் இளம் சமுதாயத்துடன் உழைப்பது திருச்சபைக்கு ஆறுதல் தருவதாக உள்ளது என்ற அவர், இதே பின்னணியில் பார்க்கும்போது கிறித்தவ குடியேற்றதாரர்களும் சமூகத்திற்கும் திருச்சபைக்கும் மிகுந்த பயன் உடையவர்களாக வரவேற்கப்பட முடியும் என்றார்.

குடும்பங்களின் அரணாக திருச்சபை நிற்கும்போது அது விசுவாசத்தை தலைமுறை வழியாய் வழங்கும் ஒரு நல்ல சூழலை உருவாக்குவதற்காக மட்டும் அவ்வாறு செய்யவில்லை, மாறாக பொது நலனுக்காகவும் அவ்வாறு செய்கின்றது என மேலும் கூறினார் கர்தினால் பெர்தோனே.








All the contents on this site are copyrighted ©.