2009-02-04 10:38:26

பெரும் மோதல்கள் இடம்பெறும் இலங்கையின் வடபகுதியில் துன்புறும் மக்களை திருச்சபை கைவிட முடியாது என்கிறார் ஆயர்.


பெரும் மோதல்கள் இடம்பெறும் இலங்கையின் வடபகுதியில் துன்புறும் மக்களிடையேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும், அவர்களைக் கைவிட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடிப் போகும் எண்ணம் தலத்திருச்சபைப் பணியாளர்களுக்கு இல்லை எனவும் கூறினார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

துன்புறும் மக்களை திருச்சபை கைவிட முடியாது என்ற ஆயர், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 20 குருக்களும் 25 அருட்கன்னியர்களும் மோதல் இடம்பெறும் பகுதிகளில், குடிபெயர்ந்துள்ள மக்களிடையே பணிபுரிகிறார்கள் என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.