2009-02-04 17:51:14

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் -040209 .


இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது . திருத்தந்தை வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றார் . இன்றைய மறைபோதகமும் திருத்தூதர் பவுலைப்பற்றியதே . இன்றைய மறைபோதகத்தோடு திருத்தூதர் பவுலின் கருத்துக்கள் பற்றிய மறைபோதகம் நிறைவு பெறுவதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . இன்று திருத்தூதர் பவுலின் இறுதி நாட்கள் பற்றியும் அவருடைய நல்ல தாக்கத்தின் தொடர்ச்சி பற்றியும் மறையுரை வழங்குவதாகத் திருத்தந்தை தெரிவித்தார் .விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நூலில் திருத்தூதர் பவுலின் இறப்பு பற்றிய செய்தி ஏதும் இல்லை எனத் திருத்தந்தை தெரிவித்தார் . பாரம்பரியச் செய்திகள் திருத்தூதர் பவுல் உரோமையை கொடுங்கோல் மன்னன் நீரோ என்பவன் ஆண்டபோது அவனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் , ஓஸ்தியென்சியே வழித்தடத்தில் உள்ள திருத்தூதர் பவுல் பேராலயத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . இந்தப் பேராலயம் தற்போது இருக்கும் இடம் முற்காலத்தில் உரோமையின் கோட்டைச் சுவர்களுக்கு வெளியே இருந்தது. முதல் நூற்றாண்டில் கொரிந்து நகர மக்களுக்கு உரோமையின் புனித கிளமெண்ட் எழுதிய மடலில் திருத்தூதர் பவுல் பொறுமையோடு ஏற்றுக்கொண்ட வேதனைகள் நாம் பின்பற்றுவதற்கு உரியது எனக்கூறுகிறார் . திருத்தூதர் பவுல் தம் மரண வேதனைபற்றிக் கூறவந்தபோது தியாகப்பலியாக தம்மை அர்ப்பணிப்பதாக அவருடைய சீடர் திமோத்தேயுவுக்கு எழுதிய 2 ஆவது மடலில் இவ்வாறு கூறுகிறார் . நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன் . நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என அதிகாரம் 4, வசனம் 2 ல் கூறுகிறார்.

திருத்தூதர் பவுலின் மடல்கள் பல விளக்கவுரை நூல்களை தோற்றுவித்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் திருத்தூதர் பவுல் தமக்கென தனிச் சிறப்பான ஓர் இடத்தை தாராளமான திருத்தூதர் எனவும் , சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர் என்றும் தெரிவிக்கின்றன . கிறிஸ்துவோடு ஒப்பிடப்படும்போது சிலர் கூறுவது போல அவர் கிறிஸ்துவைப் போல ஒரு புதுச் சமயத்தை உருவாக்கினார் எனக் கூறப்படுவது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அவருடைய போதனைகளைக் கேட்கும் நாம் இயேசுவிடம் நாம் கொண்டுள்ள பற்றுதியில் இன்னும் உறுதிப்பட்டு திருச்சபையின் நற்செய்திப் பணியில் மகிழ்ச்சியோடு பங்கேற்பமாக என மறைபோதகம் வழங்கி , வந்திருந்த அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.