2009-02-02 20:30:43

வாழ்க்கைத் தரம் பற்றி ஆய்வு நடத்துகிறது வத்திக்கான் .020209.


வத்திக்கானின் துறவற, மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வுக்கான மன்றம் அமைரிக்க ஐக்கிய நாட்டில் அங்குள்ள மகளிர் துறவற சபைகள் பற்றி விரிவான ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இம்மன்றத்தின் தலைவர் கர்தினால் பிராங்க் ரோட் இந்த ஆய்வுகள் பற்றி சுற்றுமடல் அனுப்பிச் சென்ற டிசம்பர் மாதம் இதற்கு வித்திட்டார் .அது இவ்வாண்டு சனவரி 30 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வாஷிங்டனில் உள்ள தேசிய அமல அன்னை பேராலயத்தில் தொடர்பு ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியோடு தொடங்கியது . இயேசுவின் திரு இருதய திருத்தூதர்கள் சபையின் தலைவி அன்னை மேரி கிளேர் மில்லேயா இதனை மேற்பார்வை செய்வார் . இந்த ஆய்வில் திருச்சபைக்கும் சமுதாயத்துக்கும் ஆக்கப்பூர்வமான சேவையிலிருக்கும் அப்போஸ்தலிக்க நிறுவனங்களில் துறவற வாழ்வு நிலை பற்றி ஆய்வுகள் நடக்கும் . இந்த இரகசிய ஆய்வுகள் 2011 ஆம் ஆண்டு கர்தினால் பிராங்க் ரோட் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது .








All the contents on this site are copyrighted ©.