2009-02-02 19:47:12

இலங்கையின் வன்னி மருத்துவ மனை தாக்கப்பட்டது . சாவு எண்ணிக்கை 9. பலர் காயப்பட்டுள்ளனர் . 020209 .


பிப்ரவரி முதல் தேதி இரவு நடந்த குண்டு வீச்சில் வன்னி மருத்துவ மனை தாக்கப்பட்டதில் குழந்தைகள் மருத்துவப் பகுதியும் , எலும்பு முறிவுப் பகுதியும் சேதமடைந்தன . 9 குழந்தைகள் கொல்லப்பட்டதாக முதலில் வந்த தகவல் கூறுகிறது . கடந்த சில வாரத்தில் இது இரண்டாவது முறையாக மருத்துவ மனை தாக்கப்பட்டுள்ளது . அரசு இராணுவமும் , தமிழ் விடுதலைப் புலிகளும் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்டியுள்ளனர் . இந்த மருத்துவ மனை வன்னிப்பகுதியில் இயங்கிவரும் ஒரு சில மருத்துவ மனைகளில் ஒன்றாகும் . பல பீரங்கிக் குண்டுகள் திட்டமிட்டே புதுக்குடியிருப்பில் இருக்கும் மருத்துவ மனையில் போடப்பட்டன. அகில உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா இலங்கைத் தலைநகர் கொழும்புவிலிருந்து அந்த மருத்துவ மனையில் 500 க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளார் . இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளோடு தொடுத்த அதனுடைய போர் முடியும் தருவாயில் இருப்பதாகக் கூறிக் கொண்டு அங்குள்ள மக்கள் எண்ணிக்கையை 120,000 க்கும் குறைவாகவே கூறுகிறது . இலங்கை அரசு பொது மக்களிடம் அந்தப் பகுதியை விட்டு நீங்குமாறு கூறியுள்ளது . சண்டை முடியும் தருவாயில் இருப்பதாகக் கூறி குண்டு வீசுதலைத் தீவிரப்படுத்தியுள்ள இராணுவம் அப்பாவி மக்களைத் தப்பித்துச் செல்லுமாறு கூறினால் எப்படிப் போவது என்று பிபிசி செய்தி நிறுவனம் கேள்வி கேட்டுள்ளது . மக்கள் வெளியேறுவதை தமிழ் விடுதலைப் புலிகள் தாங்கள் தடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர் . அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறவில்லை என்றால் அவர்கள் உயிருக்குத் தாங்கள் பொறுப்பு அல்ல என அரசு திடீரென அறிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.