2009-01-30 17:09:51

திருமண முறிவுக்கு அனுமதி வழங்குவதில் கவனம் தேவை, திருத்தந்தை.3001


திருமண முறிவுக்கு அனுமதி வழங்குவதில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வத்திக்கான் திருப்பீடத்தின் நீதி மன்ற நீதிபதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

ஜனவரி 29 , இந்த வியாழன் அன்று உரோமன் ரோட்டா என்னும் வத்திக்கானின் நீதிபதிகள் திருத்தந்தையைச் சந்தித்தனர் . திருமணவாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும் மணமுறிவச் சீட்டை எளிதாக வழங்குவது அடுத்தவரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அன்பு செய்யமுடியாத நிலையில் மனிதர்கள் இருப்பதாக நினைப்பதாகும் எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறினார் . உரோமன் ரோட்டா என அழைக்கப்படும் வத்திக்கானின் நீதி மன்றம் முக்கியமாக மணமுறிவுக்கு வரும் விண்ணப்பங்களையே ஆய்வு செய்கிறது . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் கூறியது போல உடனடி மணமுறிவுச் சீட்டு வழங்குவது திருமண வாழ்வையே அழித்துவிடும் நிலைமையை உருவாக்கும் . முந்நாள் திருத்தந்தை கூறியதை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், பக்குவம் இல்லாத மன நிலை காரணமாக மணமுறிவுச் சீட்டை எளிதாக ரோமன் ரோட்டா வழங்கிவருவதாகத் தெரிவித்தார் . திருச்சபைச் சட்டப்படி தக்க மனப்பக்குவம் கொண்டவர்கள் மட்டுமே மணவாழ்வுக்குத் தகுதியுடையவர்கள் . நிறைவான மனப்பக்குவத்திற்கும் , அது வளர்ச்சி பெறக்கூடியது என்ற தன்மைக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக நீதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் திருத்தந்தை தெளிவு படுத்தினார் . மனநிலை காரணமாக திருமணத்தை ரத்து செய்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை என்றும் திருத்தந்தை கருத்து வழங்கினார் . திருமண அருள்சாதனத்தின் நிலையான தன்மையைக் காப்பது , திருமண வாழ்வை முறிக்க விழையும் தம்பதியருக்கு தொல்லை கொடுப்பதற்கு அல்ல என்று திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ரோமன் ரோட்டா நீதிபதிகளுக்குக் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.