2009-01-30 17:19:58

இலங்கையில் ஜாப்னா ஆயரும் இறைமக்களும் உண்ணாவிரதம் . 3001


இலங்கையின் ஜாப்னா ஆயரும் கிறிஸ்தவர்களும் வன்னிப்பகுதியில் நடக்கும் வனமுறைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர் . இலங்கை இராணுவம் பத்து நாட்களாகக் குண்டு வீசியதில் 400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1400 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டிருக்கிறார்கள் . இலங்கை அரசு நிலைமையை மறைத்து துயரப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக்கூறி செய்தி வெளியிடுகிறது . ஐ.நாடுகள் சபையின் தொண்டுப் பணியாளர்கள் வவுனியா மருத்துவ மனையிலிருந்து நூற்றுக் கணக்கானவர்களை பாதுகாப்பாக வேறிடத்துக்கு மாற்றியுள்ளது . அதில் 50 பேர் குழந்தைகளாவர் . கடந்த புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து ஜாப்னா ஆயர் மேதகு தாமஸ் செளந்திர நாயகம் தலைமையில் கிறிஸ்தவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் . மோதல்கள் , வன்முறைகள் காரணமாக இடம் பெயர்ந்தோருக்கு உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன .மக்களுடைய தாங்க முடியாத வேதனையை அகில உலகமும் , இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதிருப்பதற்கு எதிராக அங்குள்ள மாதா பேராலயத்துக்கு முன்னர் மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர் . இதில் எல்லாச் சமயத்தவரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருவதாக ஆசியச் செய்தி கூறுகிறது .








All the contents on this site are copyrighted ©.