2009-01-29 19:33:38

யூதர்களை நாசிக் கட்சி கொன்று குவித்தது தீமைகளுக்கு எதிரான எச்சரிக்கை என்கிறார் திருத்தந்தை .


கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சென்ற லெபேவர் என்ற ஆயர் தம் இச்சைப்படி, திருச்சபைச் சட்டங்களுக்கு எதிராக ஆயராக 1988 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்திய நால்வர் திருச்சபையின்று புறம்பாக்கப்பட்டனர் . அவர்களைச் சென்ற வாரம் கத்தோலிக்கத் திருச்சபையில் வரவேற்று திருத்தந்தை ஏற்றுக்கொண்டார் . அந்த நால்வரில் ஒருவரான ரிச்சர்டு வில்லியம்சன் என்ற ஆங்கிலேய ஆயர் கருத்துக் கூறுகையில் ஜெர்மனியின் ஆஸ்ட்விச் விஷ வாயுச் சிறையில் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்படவில்லை எனக் கூறியிருந்தார் . அவ்வாறு யூதர்களுக்கு எதிராகப் பேசிய வில்லியம்சனைத் திருத்தந்தை கத்தோலிக்க மதத்தில் ஏற்றுக்கொண்டதற்கு இஸ்ராயேலின் முக்கிய ராபி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் . மேலும் மார்ச் மாதம் 2 லிருந்து 4 தேதிவரை உரோமையில் யூத சமயத்தவர் கத்தோலிக்கரோடு கலந்து பேச இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதில்லை எனவும் முக்கிய ராபி தெரிவித்தார் . யூத சமயத்தவரோடு தமக்கு உள்ள பாசத்தைத் திருத்தந்தை நேற்று புதன் மறைபோதகத்தின் முடிவில் வெளியிட்டார் . மேலும் விஷ வாயுச் சிறையில் நடந்த மாபெரும் படுகொலைகள் தீய சக்திகளின் ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.