2009-01-29 19:42:02

ஜிம்பாவே நாட்டுக்காக உண்ணாவிரதப் போராட்டம் தென் ஆப்பிரிக்காவில் தொடங்க உள்ளது .290109


அடுத்துவரும் ஞாயிறு தினத்தன்று ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் தென் ஆப்பிரிக்காவின் ஜொகான்னஸ்பர்க்கில் சந்திக்க உள்ளனர் . அவர்கள் ஜிம்பாவே நாட்டில் நீதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளனர் . ஜிம்பாவே நாட்டில் பல்லாயிரக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கே தவிக்கிறார்கள் . தென் ஆப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு , நெல்சன் மண்டேலாவின் மனைவி கார்க்கா மார்க்கெல் மற்றும் பல தலைவர்கள் மக்களோடு அனுதாபம் தெரிவித்து ஓரிரு நாட்களுக்கு உண்ணா விரதம் இருக்கிறார்கள் . ஜிம்பாவேயில் ஆள் கடத்தப்படுவதை உடனே நிறுத்துமாறும் ராபர்ட் முகாபேயை பதவி நீக்கம் செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர் .








All the contents on this site are copyrighted ©.