2009-01-29 19:37:30

ஆயரின் கடமை ஒன்றிணைப்பதாகும் என்கிறார் திருத்தந்தை ,290109.


திருச்சபையிலிருந்து புறம்பாக்கப்பட்ட தூய பத்தாம் பத்திநாதர் சபையைச் சேர்ந்தவர்களை திருத்தந்தை மறுபடியும் கத்தோலிக்கச் சபையில் ஏற்றுக் கொண்டதற்கான விளக்கம் அளித்தார் . இந்த வாரப்புதன் மறைபோதக முடிவில் திருச்சபையின் ஒன்றிப்புக் காரணமாகவே தூய பத்தாம் பத்திநாதர் சபையினரை மீண்டும் ஏற்றுக் கொண்டதாகத் திருத்தந்தை விளக்கம் அளித்தார் . திருத்தந்தை அவரது பதவி ஏற்பு விழாவின்போது ஆயரின் முக்கியப் பணி ஒருமைப்பாட்டுக்கு வழிசெய்வதாகும் எனக் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார் .கிறிஸ்து வாக்குறுதி கொடுத்திருந்த ஒருமைப் பாட்டை நிலை நிறுத்துவோம் என மறையுரையில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்து , இந்த ஒற்றுமைக்காகவே பிரிவினையை நீக்கியதாகக் கூறினார் . புறம்பாக்கப்பட்டவர்களின் துயரங்களை மனதில் கொண்டும் , அவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடும் அவர்களை வரவேற்று திருச்சபையில் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.