2009-01-27 16:47:27

இலங்கையில் கடும் சண்டை இடம் பெற்று வரும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.


27ஜன.2009. இலங்கையின் வடபகுதியில் இராணுவத்திற்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சண்டை இடம் பெற்று வரும் வேளை அதில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

வடபகுதியில் சிக்கியுள்ள ஏறத்தாழ இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான குழுக்கள் முயற்சித்து வரும் வேளை, அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மூன் கேட்டுள்ளார்.

இலங்கை அரசும் விடுதலை புலிகளும் பாதுகாப்பு வளையங்களை மதித்து நடக்குமாறும் கேட்டுள்ள அவர், சண்டை நடைபெறும் பகுதிகளில் துன்புறும் 2,50,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுவதற்குப் போரிடும் குழுக்கள் அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.

போர் நடக்கும் பகுதிகளில் அப்பாவி மக்களின் நிலைமை நம்புவதற்கும் கடினமான மிக மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. பேச்சாளர் ஒருவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.