2009-01-26 11:09:29

சைனப் புத்தாண்டையும் உலகத்தொழுநோயாளர் தினத்தையும் நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.


26ஜன.2009. இன்று புத்தாண்டைத் தொடங்கிய கிழக்கு ஆசிய மக்களுக்குத் தமது நல்வாழ்த்துக்களையும் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை.

மக்கள் அனைவரும் இறைவனோடும் படைப்புக்களோடும் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தோடு வாழுமாறும் அவர் வாழ்த்தினார்.

சீனா, ஜப்பான், தாய்வான், ஹாங்காங், சிங்கப்பூர், வியட்நாம், இன்னும், சீனர்கள் வாழும் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இப்புத்தாண்டு சிறப்பிக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்ட 56வது உலக தொழுநோயாளர் தினம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, தொழுநோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா.அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்துத் தான் மகிழ்வதாகவும் கூறினார்.

தொழுநோயாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பணி செய்வோருக்கானத் தனது செபங்களையும் திருத்தந்தை தெரிவித்தார்.

இம்மூவேளை செப உரையைக் கேட்டு ஆசீர் பெற வந்திருந்த இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் சிறாருக்கும் வாழ்த்துச் சொன்ன அவர், இவ்வுரையின் இறுதியில் இரு சிறாருடன் சேர்ந்து பாப்பிறை மாளிகை ஜன்னலிலிருந்து மாடப்புறாக்களைப் பறக்கவிட்டார்.








All the contents on this site are copyrighted ©.