2009-01-24 14:52:26

ஹாங்காங் மதங்களின் தலைவர்கள் மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்


ஜன.24,2009. இன்றைய பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நம்பிக்கைகளைக் கைவிட்டு மனந்தளர வேண்டாம் என்று ஹாங்காங்கின் ஆறு முக்கிய மதங்களின் தலைவர்கள் இணைந்து சீன புத்தாண்டிற்கானத் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர்.

ஜனவரி 26ம் தேதி தொடங்கும் எருது ஆண்டையொட்டி மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் ஒருவர் ஒருவர் மீதான அன்பிற்கும் இவ்வாழ்த்துச் செய்தியில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறைக்கான சிறப்புக் கல்வி, பெற்றோர்களுக்கான மதிப்பை ஊக்குவித்தல், பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் நம்பிக்கை இழக்காதிருத்தல் போன்றவைகளில் சிறப்புக் கவனம் செலுத்தவும் இத்தலைவர்கள் தங்கள் செய்தியில் உறுதி கூறியுள்ளனர்.

ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் செகியுன், ஆங்கிலக்கன் ஆயர் தாமஸ் சு யு-போ, இன்னும் புத்த, இஸ்லாம், தாவோயிஸ, கன்பூசியன் ஆகிய மதங்களின் தலைவர்கள் இச்செய்தியில் கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.