2009-01-22 19:03:39

கருச்சிதைவால் வாழ்வைத் தடுக்கவேண்டாம் ,அமெரிக்காவில் பேரணி. 2201


கருச்சிதைவால் வாழ்வைத் தடுக்கவேண்டாம் என்ற வாழ்வைப் போற்றும் மக்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்தப்புதன் மாலை குவிந்தனர் . கடும் குளிரையும் பொருட்படுத்தாது 2 இலட்சம் மக்கள் இந்த மாபெரும் பேரணியி்ல் பங்கேற்றனர் . 1973 ஆம் ஆண்டு அமெரி்க்க உச்ச நீதிமன்றம் கருச்சிதைவுக்கு அனுமதி வழங்கியது .சாவை ஆதரிக்கும் கலாச்சாரத்தைத் தடைசெய்யுமாறு அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமாவை பேரணியினர் வற்புறுத்த உள்ளனர் . புதிய அதிபர் ஒபாமா அமெரிக்க ஐக்கிய நாட்டை வாழ்வுக்குரிய இடமாக மாற்றும் சக்தியுள்ளவர் என பேரணியினர் கூறியுள்ளனர் .இது ஆண்டுதோறும் நடக்கும் போராட்டமாகும் .அமெரிக்க ஆயர்குழுவின் வாழ்வியல் மன்றத் தலைவர் கர்தினால் ஜஸ்டின் ரீகாலி இப்புதன்கிழமை வாஷிங்டனில் உள்ள அமல உற்பவ அன்னை திருத்தலத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றி செபித்தார் . இளைஞர்கள் இரவு முழுவதும் கண் விழித்துச் செபம் செய்தார்கள் . 22 வியாழன் காலையி்ல் திருப்பலி நிகழ்த்தி பேரணியை ஆர்லிங்டனின் ஆயர் பால் லவர்தே தொடங்கிவைத்தார் . இந்தக் கருச்சிதைவு என்னும் தொற்றுவியாதி அமெரிக்காவில் அதிகமாகப் பரவியுள்ளது எனப் பேரணியில் பங்கேற்ற ஐலீன் பிக்கட் என்பவர் கூறியுள்ளார் . சாவுக்குப் பதிலாக வாழ்வைத் தேர்ந்து கொள்ளுமாறு தாய்மார்களை ஊக்குவிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.