2009-01-22 19:07:26

கத்தோலிக்கருக்கு எதிரான ஆங்கிலேயச் சட்டங்களை நீக்க முயற்சி . 2201


கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட ஆங்கில நாட்டுச் சட்டங்களை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது . ஈவான் ஹாரிஸ் என்ற லிபரல் டெமக்கிராட்டிக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் 1701 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு இன்னும் அமலில் இருக்கும் ஒரு சட்டத்தை நீக்க மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் . அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்கர்கள் ஆவதையும், கத்தோலிக்கர்களை மணமுடிப்பதையும் அச்சட்டம் தடைசெய்கிறது . வருகின்ற மார்ச்சு மாதம் இந்த மசோதா வாதத்துக்கு வரும் . ஆங்கில மன்னர்கள் ஆங்கிலி்க்கன் கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்பதில் ஹாரிஸ் மாற்றம் கொண்டுவர விரும்பவில்லை . ஆங்கில அரச குடும்பத்தினர் கத்தோலிக்கர்களாவதற்கும் , கத்தோலிக்கரை மணமுடிப்பதற்கும் இருந்த தடை நீங்குவதற்கு நல்ல காலம் வந்துவிட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது . வெஸ்ட்மினிஸ்டரின் கர்தினால் கோர்மாக் ஓகானரின் செய்தித் தொடர்பாளர் இந்தச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகள் உறுதியாக நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.