2009-01-21 10:58:11

வெனிசுவேலா திருப்பீடத்தூதரகம் மீது தாக்குதல்.


வெனிசுவேலா அதிபரின் கருத்துக்களுக்கு முரண்படுபவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்நாட்டுத் திருப்பீடத்தூதரகம் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அந்நாட்டுப் பேராயர் ராபர்ட் லுக்கெர்ட் லியோன்.

கராகாஸிலுள்ள திருப்பீடத் தூதரகம் மீது திங்களன்று காலை 6 கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டது குறித்து தன் எதிர்ப்பை வெளியிட்ட வெனிசுவேலா ஆயர் பேரவையின் துணைத் தலைவர் பேராயர் லியோன், தூதரகங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய தன் கடமையிலிருந்து அரசு தவறியுள்ளது என்றார்.

மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் அதிகாரங்களைக் குறைத்து அவைகளை தன் கைவசம் வைத்துக்கொள்ளும் அரசுத்தலைவரின் போக்கை தலத்திருச்சபை ஏற்கனவே கண்டித்துள்ளதைத் தொடர்ந்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

எதிர்க்கட்சி மாணவர்த் தலைவர் ஒருவருக்கு வெனிசுவேலாவுக்கான திருப்பீடத் தூதரகம் தற்போது அடைக்கலலம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.