2009-01-21 09:58:10

புதிய அதிபர் ஒபாமாவுக்கான திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி.


அமெரிக்க ஐக்கிய நாடு தன் ஆன்மீக பாரம்பரியங்களையும் ஒழுக்கரீதி முக்கியத்துவங்களையும் மீன்டும் கண்டுகொள்ள் வேண்டுமென்ற அழைப்புடன் அந்நாட்டின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள பாரக் ஒபாமாவுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அனைத்து மக்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் மாண்பும் உரிமையும் சரிநிகர்தன்மையும் மதிக்கப்படுவதை உள்ளடக்கிய ஓர் உண்மையான, நீதியான மற்றும் சுதந்தரமான சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான மதிப்பீடுகளை, அமெரிக்க மக்கள் தங்கள் மத மற்றும் அரசியல் பாரம்பரியங்கலிலிருந்து கண்டுக்கொள்ளட்டும் எனவும் தன் தந்தி செய்தியில் வழ்த்தியுள்ளார் திருத்தந்தை.

உலகமெங்கிலும் நம் சகோதர சகோதிரிகள் ஏழ்மை, பசி மற்றும் வன்முறைகளின் பிடிகளிலிருந்து விடுதலை பெற ஏங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், புதிய அதிபர் நாடுகளுக்கிடையேயான புரிந்துகொள்ளுதல், அமைதி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் தன்னை மேலும் அர்ப்பணிக்க வேண்டும் எனவும் திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி அழைப்பு விடுக்கிறது.








All the contents on this site are copyrighted ©.