2009-01-20 15:19:18

லித்துவேனியாவில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சிகளுக்கு கவுனாஸ் பேராயர் கண்டனம்


ஜன.20,2009. லித்துவேனிய நாட்டில் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவை தலைவர் கவுனாஸ் பேராயர் சிஜிட்டாஸ் டாம்கேவிசியுஸ்.

நாம் நாட்டை பாதுகாக்க வேண்டுமேயொழிய சிதைக்கக்கூடாது என்றுரைத்த பேராயர் டாம்கேவிசியுஸ், ஜனநாயக நாட்டில் வாழ்வதென்பது நியாயமான வழிகளால் ஒருவரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும், அது வன்முறையால் அல்லாமல் சாத்வீகமாகவும் சட்டரீதியாகவும் செய்யப்பட வேண்டும் என்றார்.

லித்துவேனியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், வரவு செலவ கணக்கில் எதிர்நோக்கப்படும் நஷ்டம் போன்றவற்றைச் சரிக்கட்டுவதற்காக வரியை உயர்த்துவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருவதை எதிர்த்து தலைநகர் வில்னியுசில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் அது கலவரமாக மாறி கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் சேதங்களைத் தடுப்பதற்காகக் காவல்துறை தடியடி பயன்படுத்தியது.

இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட பேராயர் டாம்கேவிசியுஸ், நாடாளுமன்றத்தின் சில தீர்மானங்கள் ஒருதலை சார்பின்றி இருந்திருக்கலாம், எனினும் நல்ல தீர்மானங்கள்கூட, நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு முடியாது என்று கூறியுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.