2009-01-20 15:17:57

மார்ட்டின் லூத்தர் கிங்கின் நினைவாக இடம் பெறும் மூன்று நாள் கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டன


ஜன.20,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டில், மார்ட்டின் லூத்தர் கிங்கின் நினைவாக இடம் பெறும் மூன்று நாள் கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான முன்னெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இத்திங்களன்று நாடெங்கும் தொடங்கியுள்ள இவ்விழாக்களில், கூட்டங்கள், ஊர்வலங்கள் என பதினோராயிரத்து நானூறுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு கறுப்பினத்தவர் அரசுத் தலைவராகப் பதவியேற்பதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ட்டின் லூத்தர் கிங்கின் நினைவு கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம் பெறுகின்றன என்று கூறப்படுகின்றது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் மற்றும் வரலாற்றில் ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் மார்ட்டின் லூத்தர் கிங்குக்கும் நினைவு தினங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமைப் போராட்டத்தில் முக்கியமானவரான மார்ட்டின் லூத்தர் கிங், 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்ரிக்க அமெரிக்க கலப்பு இனத்தைச் சேர்ந்த இவர், அட்லாண்டாவில் 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பிறந்தார். இவர் பாபிஸ்ட் கிறிஸ்தவ சபை பாதிரியாருமாவார்.








All the contents on this site are copyrighted ©.