2009-01-19 14:19:53

ஜனவரி 20- வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி.250 – உரோமையில் பேரரசன் தேசியுஸ் கிறிஸ்தவர்களை பரவலாக நசுக்கத் தொடங்கினார். அவ்வடக்குமுறையில் புனித திருத்தந்தை பாபியன் கொல்லப்பட்டார்.

1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.

1502 – தற்போதைய ரியோ தெ ஜெனியெரோ நகர் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது

1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது 1937 - அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர்கள் பதவியேற்கும் நாள் தொடங்கபட்டது.

1944 – இரண்டாம் உலகப் போரில் ராயல் விமானப்படை 2,300 டன் எடையுள்ள குண்டுகளை பெர்லின் நகர் மீது வீசியது.

1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்

1969 - இந்தியாவின் முதல் அணு உலை தொடங்கப்பட்டது.

1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது








All the contents on this site are copyrighted ©.