2009-01-17 11:42:16

கத்தோலிக்கர் குடியேற்றதாரிடம் தோழமையணர்வு காட்டுமாறு மத்ரித் பேராயர் அழைப்பு


ஜன.17,2009. தற்போதைய உலகளாவிய பொருளாதார பிரச்சனை பலரைப் பாதித்துள்ள வேளை, ஸ்பெயின் கத்தோலிக்கர், குடியேற்றதாரிடம் தோழமையணர்வு காட்டுமாறு தலைநகர் மத்ரித் பேராயர் கர்தினால் அந்தோனியோ மரிய ரோக்கோ வரேலா கூறினார்.

அகில உலகக் கத்தோலிக்கத் திருச்சபை இஞ்ஞாயிறன்று 95வது குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்ந்தோர் தினத்தைக் கடைபிடிப்பதை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட கர்தினால், குடியேற்றதாரர் வாழ்க்கையில் அழைப்பையும் பணியையும் கொண்டிருக்கின்றனர் என்பதால் அவர்கள் முன்னேறுவதற்குக் கடமையும் உரிமையும் உள்ளன என்றும் கூறினார்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார பிரச்சனை குடியேற்றதாரர் மற்றும் அவர்களின் குடும்பங்களை வெகுவாய்ப் பாதிக்கும் அபாயம் தெரிவதாகவும் எச்சரித்த அவர், நாட்டின் நலம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்கை மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தற்சமயம் உலகில் இருபது கோடி குடியேற்றதாரர் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.