2009-01-16 20:21:29

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது . 160109


ஆண்டு தோறும் வழக்கமாக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் ஜனவரி 18 லிருந்து 25 வரை கிறிஸ்தவ பிரிவினை சபைகள் ஒன்றுபடுவதற்காக உருக்கமான செபத்தோடு கொண்டாடப்படும் . இந்த ஆண்டும் வரும் ஞாயிறு 18 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 25 தேதி வரை கொண்டாடப்படும் . செபத்தின் மையக்கருத்தாக- அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர்- என்ற இறைவாக்கினர் எசக்கியேலின் திருவசனம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . ( எசக்கியேல் 37, 17 ) . கொரியத் திருச்சபையினர் தேசியத் திருச்சபை ஒன்றுபடுவதற்காக இறைவாக்கினர் எசக்கியேலிடமிருந்து தூண்டுதல் பெற்றதாக வத்திக்கானின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகம் கூறியுள்ளது . எசக்கியேல் காலத்திலும் பிரிவினைகள் இருந்திருக்கின்றன . ஒவ்வொரு நாளும் சிறப்பான கருத்துக்காக இறைமக்களை வேண்டும்படி திருச்சபை அழைப்பு விடுத்துள்ளது .

18 ஜனவரி - கிறிஸ்தவ சமூகங்கள் நேருக்கு நேராக பழைய புதிய பிரிவினைகளின் சவால்களைச் சந்திப்பதற்காக செபிக்குமாறு அழைக்கப்படுகிறோம் .

19 - கிறிஸ்தவர்கள் போரும் வன்முறையும் தரக்கூடிய சவால்களைச் சந்திக்கமாறும் ,

20 – நேருக்கு நேராக பொருளாதார அநீதி , ஏழ்மையோடும் ,

21 – சுற்றுப்புற சூழல் சவால்களோடு நேருக்கு நேராகவும் ,

22 – ஒரு சார்பு உணர்வோடு மக்களை வேறுபடுத்திப் பிரிப்பது , சமூக எதிர் சார்புத்தன்மையோடு பிரிப்பதை நேருக்கு நேராகச் சந்திக்கவும்

23- நோய்களையும் , துன்பங்களையும் கிறிஸ்தவர்கள் நேருக்கு நேராகச் சந்திக்கவும்

24 – பல்வேறு மதங்களையும் நேருக்கு நேராகச் சந்திக்கவும் ,

25- பிரிந்துகிடக்கும் உலகில் நம்பிக்கையை அறிவிக்கவும் செபிக்குமாறு வேண்டப்பட்டுள்ளோம் .

இம்மாதம் 25 ஆம் தேதி திருத்தூதர் பவுல் அடிகளாரின் மனமாற்ற நாளன்று திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் உரோமைக்கு வெளியில் உள்ள திருத்தூதர் பவுல் பசிலிக்காவில் மாலை கண்விழிப்பு வழிபாட்டை நடத்தி கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தினை முடித்து வைப்பார் என வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.