2009-01-15 16:46:55

மெக்சிக்கோ குடும்பக்கருத்தரங்கில் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ.1501.


மெக்சிக்கோவில் நடக்கும் அகில உலகக் குடும்பங்களின் கருத்தரங்கில் கருத்து வழங்குகினார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .வத்திக்கான் திருப்பீடத்தின் குடியேற்றதாரர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பேராயர் மார்க்கெட்டோ .

இன்று நண்பகலில் மெக்சிக்கோவில் பேராயர் மார்க்கெட்டோ குடி பெயரும் குடும்பங்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினார் . அகில உலக புலம்பெயர்வோரின் 93 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்துக்குத் திருத்தந்தை செய்தி வழங்கியிருந்ததை பேராயர் நினைவு கூர்ந்தார் . குடிபெயரும் குடும்பங்கள் பல சவால்களைச் சந்திக்க வேண்டுயுள்ளதாகப் பேராயர் தெரிவித்தார் . புதிய நாடுகளில் குடியேறும் போது அங்கு அவர்களுக்குத் தற்காலிகப் பாதுகாப்பே தரப்படுகிறது . குடும்பங்களை தனியே வி்ட்டுவிட்டுச் செல்வோரின் குடும்பங்கள் தனிமையில் , வறுமையில் வாடும் சூழ்நிலை உருவாகிறது . குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தேவையுறுகிறது . திருக்குடும்பம் இயேசு மரி சூசையோடு நாடுகடந்து சென்றது இடம் பெயரும் குடும்பங்களுக்கு மாதிரியாக இருப்பதாகப் பேராயர் கூறினார் . அவர்கள் படும் துயரங்களைப் பட்டியலிட்டுக்காட்டினார் . நாடுகளின் அரசியலாரும் , கிறிஸ்தவச் சமூகமும் புலம் பெயர்ந்து வருவோர் குடிமக்களாக வாழ வழிசெய்ய வேண்டும் எனப் பேராயர் வலியுறுத்தினார் . வேற்று நாடுகளுக்குப் படிக்கச் செல்வோர் , புலம்பெயர்வோர் , அகதிகளாக அடைக்கலம்த தேடுவோர் ஆகியோருக்குப் பாதுகாப்புத் தேவை என்பதை திருத்தந்தையரின் சுற்றுமடல்களிலிருந்தும் மேற்கோள்காட்டி , குடும்பங்கள் நிலைபெற தக்க பாதுகாப்புத் தர நாம் அனைவரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .








All the contents on this site are copyrighted ©.