2009-01-15 16:41:21

போர் நடக்கும் பகுதியில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு .1501 .


போர்நடக்கும் பகுதியில் பொதுமக்களுக்குப் பாதுகாப்புக் கொடு்க்குமாறு ஐ . நா சபையைக் கேட்கிறார் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே .

நியூயார்க்கின் ஐ .நா. சபையின் வத்திக்கான் திருப்பீடத்துக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே . இந்த வாரம் புதன்கிழமை ஜனவரி 14 இல் அவர் அங்கு உரை நிகழ்த்தினார் .

இருதரப்புக்கள் போரிடும்போது பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகிறார்கள் . இது பற்றி கடந்த 10 ஆண்டுகளாகவே ஐ . நா வில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது . பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாது தவிப்பது அதிகரித்து வருகிறது . இதைக் கண்கூடாக காஜாப்பகுதியில் , ஈராக் , டார்பூர் , காங்கோ ஆகிய நாடுகளிலும் மற்ற இடங்களிலும் காண்கிறோம் எனக்கூறினார் பேராயர் மிலியோரே .

இவ்வாண்டு ஜெனீவா ஒப்பந்தங்களின் 60 ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறோம் . அகில உலக ஒப்பந்தப்படி மனிதாபிமான முறையில் நாம் போரிடும் நாடுகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என பேராயர் செலஸ்டீனோ மிலியோரே நியூயார்க் நகரில் நடக்கும் ஐ . நாடுகள் சபையில் வலியுறுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.