2009-01-15 16:59:03

ஐ .நாடுகள் சபைத் தலைவர் பாங்கிமூன் காஜாப்பகுதிக்கு வருகை.150109 .


வருகையின்போது அவர் ஹாமாஸ் தலைவர் அப்பாசை சந்திக்கமாட்டார் எனத் தெரிகிறது . சாவு எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது . இஸ்ராயேல் காஜாப்பகுதியை மொத்தமாக அழிக்கும் எண்ணத்தில் போரிட்டு வருகிறது . குழந்தைகளின் உரிமைகளை மதிக்க இஸ்ராயேல் தவறிவிட்டதாக ஐ . நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது . அகில உலக செஞ்சிலுவைச் சங்கம் காயப்பட்டோரை மதித்து சிகிச்சை செய்ய அனுமதி வேண்டியுள்ளது . இம்மாதம் 13 ஆம் தேதி போர் கடுமையாக நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . ஐ . நாடுகள் சபை தலைவர் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்றுள்ளார் . அவர் எகிப்து நாட்டுத்தலைவர் ஹோஸ்னி முபாரக் , மற்றும் இஸ்ராயேல் பாலஸ்தீன நாட்டுத்தலைவர்களைச் சந்திக்க உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.