2009-01-15 16:54:44

18 , ஜனவரி குடியேற்றதாரர்கள் ஞாயிறு . 150109 .


வருகின்ற ஞாயிறு தினத்தை அகில உலக புலம் பெயர்ந்தோர் தினமாகக் கொண்டாடுமாறு அறிவித்துள்ளது வத்திக்கான் . குடியேற்றதாரர்களுக்கு எதிராக வெறுப்புணர்வையும் எதிர்ச்சார்புத் தன்மையும் நற்செய்திப் படிப்பினைக்களுக்கு ஒவ்வாதது என வத்திக்கான் தெரிவித்துள்ளது . இதுபற்றிய திருத்தந்தையின் கருத்துக்களை வெளியிட்டுக் கருத்து வழங்கிய இத்தாலிய ஆயர்குழுவின் குடியேற்றதாரர்களுக்கான மன்றத்தின் தலைவர் ஆயர் போர்ட்டோலோ பெலோட்டி உலகில் 50 கோடிமக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார் . வளரும் நாடுகளிலில் இருந்து இத்தாலியில் பலர் குடியேறியுள்ளதாக ஆயர் மேலும் தெரிவித்தார் . அவர்களை நேச உணர்வோடு கிறிஸ்தவர்கள் வரவேற்க வேண்டும் என குடியேற்றதாரர்களுக்கான இத்தாலிதய ஆயர்குழுவின் தலைவர் பேராயர் பியர்ஜார்ஜியோ சாவியோலா கூறியுள்ளார் . பல கலாச்சாரங்களும் , பல மொழிபேசுவோரும் , பல் வேறு இன மக்களும் ஒரே குடும்பமாக அன்புற்று வாழும் நிலை வரவேண்டும் என மேலும் பேராயர் சாவியோலா கூறினார் .








All the contents on this site are copyrighted ©.