2009-01-14 15:33:24

அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிகோ நாடுகளின் அரசுத்தலைவர்கள் அந்நாடுகளின் குடியேற்றதாரர் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து உழைக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு


ஜன.14,2009. அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிகோ நாடுகளின் அரசுத்தலைவர்கள் அந்நாடுகளின் குடியேற்றதாரர் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து உழைக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத் தலைவர் ஆயர் ஜான் வெஸ்ட்டர் விண்ணப்பித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவும் மெக்சிகோ அரசுத்தலைவரும் நடத்திய சந்திப்பை முன்னிட்டு இவ் விண்ணப்பித்தை முன்வைத்தார் ஆயர் வெஸ்ட்டர்.

அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிகோவில் குடியேற்றதாரருக்கு எதிராக நடத்தப்படும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க அல்லது மெக்சிகோ பாலைவனத்தில் குடியேறிகளாக ஆகக்கூடியவர்களின் வாழ்வு சோகத்தில் முடிவதைச் சுட்டிக் காட்டிய ஆயர் வெஸ்ட்டர், இந்த இரண்டு நாடுகளின் எல்லைகளில் 1994ம் ஆண்டு முதல் நான்காயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பிரிவினைச் சுவர்களை அல்ல, மாறாக ஒத்துழைப்பின் பாலங்களைக் கட்டுமாறும் அமெரிக்க ஆயரின் கடிதம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.