2009-01-13 14:55:26

மத்திய கிழக்குப் பகுதியில் சண்டை நிறுத்தப்படுவதற்கு சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க அழைப்பு - திருப்பீடம்


ஜன.13,2009. மத்திய கிழக்குப் பகுதியில் சண்டையிடும் குழுக்கள் அச்சுழல் வன்முறையிலிருந்து தாங்களாகவே வெளிவர இயலாது என்பதால் அவர்களுக்குச் சர்வதேச சமுதாயத்தின் உதவி தேவைப்படுகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகிய பேராயர் சில்வானோ தொமாசி, மனித உரிமைகளுக்கான அவையின் ஒன்பதாவது சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையில் காசா பகுதியின் மோதல்கள் நிலைமை குறித்து இவ்வாறு கூறினார்.

காசாவில் தொடர்ந்து இடம் பெறும் இரத்தம் சிந்தலும் வனமுறையும் அமைதியையும் நீதியையும் கொண்டு வராது, அதேசமயம் வெறுப்பையும் பகைமையையும் அதிகமாக்கி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கும் என்றும் பேராயர் தொமாசி எச்சரித்தார்.

சண்டையிடும் குழுக்கள் சர்வதேச சமூகத்தின் உதவியின்றி இந்தத் தொடர் வன்முறையிலிருந்து தாங்களாகவே வெளிவர இயலாது என்பதால் சர்வதேச குழுக்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து இரத்தம் சிந்துதல் நிறுத்தப்படவும் மனிதாபிமான உதவிகள் சென்றடைய உதவுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேல் துருப்புக்கள் காசாவின் புறநகர் பகுதியில் முதன்முறையாக நுழைந்துள்ளதாக இச்செவ்வாயன்று ஊடகங்கள் கூறின







All the contents on this site are copyrighted ©.