2009-01-13 14:59:09

குவாத்தமாலாவில் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் அச்ச உணர்வுகளுக்கு எதிராக அந்நாட்டின் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் அமைதி ஊர்வலம் நடத்தினர்


ஜன.13,2009. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் அச்ச உணர்வுகளுக்கு எதிராக அந்நாட்டின் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

கத்தோலிக்கர் ஏர்பாடு செய்த இந்த அமைதி ஊர்வலத்தில் எங்களுக்கு அமைதி வேண்டும் என்ற கோஷங்களுடன் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

குவாத்தமாலா நகர் பேராலயத்தின் முன்னர் கூடிய இம்மக்களிடம் பேசிய அந்நகர் கர்தினால் ரொடோல்போ கெசாதா தொருனோ, வன்முறையைக் கண்டிப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, சமூக நீதியின்றி அமைதி இல்லை என்றார்.

1996 ல் குவாத்தமாலாவில் உள்நாட்டு சண்டை முடிவடைந்த பின்னர் அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் கும்பல்வனமுறை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் குறித்து திருச்சபை கொண்டுள்ள கவலையின் ஓர் அடையாளமே இந்த ஊர்வலம் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அந்நாட்டில் 2008ல் 6292 பேர் கொல்லப்பட்டனர். இது 2007ம் ஆண்டைவிட 8 விழுக்காடு அதிகமாகும்.

குவாத்தமாலாவில் 36 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டு சண்டையில் இரண்டு இலட்சம் பேர் பலியாகினர். அப்போது மக்கள் வாழ்ந்ததைவிட தற்சமயம் 94 விழுக்காட்டு மக்கள் தங்களின் சொந்த பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.










All the contents on this site are copyrighted ©.