2009-01-13 14:56:34

இஸ்ரேல் இராணுவம் நடத்தும் போர்க்காலக் குற்றங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கென மனித உரிமைகள் குழு ஒன்றை அனுப்புவதற்கு ஐ.நா.தீர்மானித்துள்ளது


ஜன.13,2009. காசா பகுதியில் நான்காவது நாளாக சண்டை தொடரும் வேளை, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்தும் போர்க்காலக் குற்றங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கென மனித உரிமைகள் குழு ஒன்றை அனுப்புவதற்கு ஐ.நா.தீர்மானித்துள்ளது.

காசா பகுதியில் இடம் பெறும் இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள அதேவேளை, ஆக்ரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இராணுவம் அகற்றப்படுமாறும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஐ.நா. மனித உரிமைகள் அவை.

காசா வன்முறையில் 280 சிறார், 95 பெண்கள் உட்பட ஏறத்தாழ 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமார் 4000 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐ.நா. தீர்மானம், உலகளாவிய எதிர்ப்புக்கள், தூதரக முயற்சிகள் ஆகியவைகளைக் கண்டு கொள்ளாமல் இஸ்ரேல் காசாவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.