2009-01-12 10:00:11

ஜிம்பாபுவேயில் பத்து வீடுகளுக்கு ஒன்பது வீதம் பசியால் வாடுகின்றன


ஜன.10,2009. ஜிம்பாபுவே நாட்டில் பத்து வீடுகளுக்கு ஒன்பது வீதம் பசியால் வாடும் வேளை, பசியால் வாடும் அம்மக்களுக்கென எழுபது இலட்சம் டாலருக்கு சர்வதேச காரித்தாஸ் அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

ஜிம்பாபுவேயின் ஏறத்தாழ ஒருகோடி மக்களுள் ஐம்பது இலட்சம் பேர் உணவு உதவிக்காகக் காத்திருக்கின்றனர் என்றுரைக்கும் காரித்தாஸ், 25 இலட்சம் பேருக்கு உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் காலராவினால் ஏற்கனவே 1700 பேர் இறந்தும் 36 ஆயிரம் பேர் தாக்கப்பட்டும் உள்ள நிலையில் பசிக்கொடுமை மேலும் மோசமடைந்துள்ளது என்றும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு கூறியது.

 








All the contents on this site are copyrighted ©.