2009-01-08 17:25:40

வத்திக்கான் நாட்டுக்கான பல்வேறு நாடுகளுக்கான தூதர்களை வரவேற்று உரை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 080109 .


178 நாடுகளோடு வத்திக்கானுக்கு உறவு உள்ளது . ஐரோப்பியக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து பங்கேற்கிறது . மால்ட்டா நாட்டோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது . வத்திக்கான் நாட்டுக்கான் தூதர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை இன்றை உலக நிகழ்ச்சிகளை கிறிஸ்துமஸ் தரும் நம்பிக்கையோடு நோக்குமாறு கூறி , ஆண்டவர் நமக்கு நீதியும், அமைதியும் , சாந்தமும் தரும் புதிய ஆண்டினைத் கொடையாகத் தந்துள்ளார் என்றும் மொழிந்தார் .

கடந்த ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளானவர்களை நினைவு கூர்ந்தார் . எவ்வளவோ முயற்சிகள் நடந்தும் இன்னும் உலக அமைதி எட்டாததாக இருக்கிறது என்றார் . உற்சாகமிழக்காது நம்முடைய முயற்சிகளை இரட்டிப்பாக்கி அமைதியை நிலை நாட்டுவோம் என்றார் . உலகில் இருக்கும் எண்ணிக்கையில்லாத ஏழைகளை நினைவு கூர்ந்தார் . அமைதியை நிலைநாட்ட நாம் ஏழைகளுக்கு நம்பிக்கையை வழங்கவேண்டும் எனக் கூறினார் . மனித மாண்பை நாம் நிலைநாட்டவேண்டும் எனத்திருத்தந்தை வேண்டுகோள் வைத்தார் . இந்த குறிக்கோள் சவால்கள் நிறைந்தது என மேலும் கூறினார் . ஆன்மீக மதிப்பீடுகளை உதாசீனப்படுத்தாத , நல்ல மதிப்பீடுகளைக் கொண்ட நீதி செழித்தோங்கும் , விடுதலையைத் தரும் நிலைமையை நாம் உருவாக்க வேண்டும் எனத் திருத்தந்தை வலியுறுத்தினார் .

கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு நாடுகளைக் கேட்டுக்கொண்டார் . இது நன்னெறிக்கு எதிரானது என எடுத்துரைத்தார் . நற்செய்தி மதிப்பீடுகள் உலகோதயச் சி்ந்தனைக்கு எதிரானதுதான் எனவும் கூறினார் . மத்திய கிழக்கு நாடுகளிலும் பெத்லகேமிலும் நடந்துவரும் வன்முறை பெருமளவு பொருள் சேதத்தையும் , உயர்ச்சேதத்தையும் உருவாக்கியுள்ளது . இதற்கு போர்மட்டுமே தீர்வு அல்ல எனக்கூறிய திருத்தந்தை அங்கு போரிடும் நாடுகள் மோதலை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் எனக் கூறினார் . ஆசியாவில் சமயச் சுதந்திரம் பற்றிப்பேசிய திருத்தந்தை மத்திய ஆசியாவிலும் மற்ற பகுதிகளிலும் அடிப்படை மனித உரிமைககள் மதிக்கப்படவேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . முடிவாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழக்கூடிய மக்களுக்கு வாழ்வு வழங்குவது பற்றியும் , பிறக்க வேண்டிய குழந்தைகளுக்குள்ள உரிமைகள் பற்றியும் , நோயுற்றோரையும் முதியோரையும் பேணுதல் , அவர்களுக்கு மனித மாண்புகளை வழங்குதல் , இவற்றை நல்ல மதிப்பீடுகளின் பார்வையில் நோக்குமாறு கேட்டுக் கொண்டார் . குழந்தை வடிவில் குடிலில் பிறந்த இயேசு பொதுநல நோக்கோடு ஏழ்மையைப் போக்கவும் , அமைதியை நிலை நாட்டவும் வழி காட்டுவதாகக் கூறி , இயேசுவின் ஒளி மக்கள் நடுவே உலகெங்கும் ஒளிரட்டும் என வாழ்த்துக் கூறி ஆசி வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.