2009-01-08 17:29:03

அகில உலக வானிலை ஆராய்ச்சி ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறது வத்திக்கான் . 080109 .


வானிலையை முதன் முதலாக தொலை நோக்குக் கருவி கொண்டு ஆராய்ந்தவர் கலிலேயோ கலிலேயி என்ற இத்தாலிய விஞ்ஞானி . இன்றைக்கு நாநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கலிலேயோ தொலை நோக்குக் கருவியைக் கண்டுபிடித்தார் . இவ்வாண்டினை வானிலை ஆராய்ச்சி ஆண்டு என யுனெஸ்கோ நிறுவனம் சிறப்பாக வானிலை ஆராய்ச்சிகளுக்கு விழா எடுக்கிறது . இவ்விழா யுனெஸ்கோவின் தலைமைப்பீடமான பாரிஸ் நகரில் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளது . அந்த விழாவில் வத்திக்கான் திருப்பீடத்தின் சிறப்பான பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் . வத்திக்கான் திருப்பீடத்திக்குச் சொந்தமான வானிலை ஆராய்ச்சி நிலையம் உரோமைக்கு அருகில் காஸ்டல் காண்டால்போ மலைமீது அமைந்துள்ளது . அங்கு வானிலை ஆராய்ச்சிக்குப் பொறுப்பாக உள்ள நட்சத்திரக்கூட்டங்களின் சிறப்பு நிபுணர் அர்ஜெண்டீனா நாட்டைச் சேர்ந்த இயேசுசபையின் தந்தை ஜோஸ் கபிரியேல் பூனஸ் , மற்றும் இயேசு சபையின் சகோதரர் கீ கொண்சால்மாக்னோ , மற்றும் செக் குடியரசின் இயேசு சபையைச் சேர்ந்த தந்தை பாவல் காபோர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் .

வானிலை ஆராய்ச்சி சமுதாயத்துக்கும் , கலாச்சாரத்துக்கும் ஆற்றிவரும் அருந்தொண்டினைப் பாராட்டும் வண்ணம் இந்த வானிலை ஆராய்ச்சியின் ஓராண்டுக் கொண்டாட்டவிழா தனி நாடுகளிலும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது . வத்திக்கான் திருப்பீடத்தின் ஸ்பெக்கோலா வத்திக்கானா என்ற பெயர்கொண்ட வானிலை ஆராய்ச்சி நிலையம் பல் வேறு வழிகளில் இந்தக் கொண்டாட்டத்துக்கு ஆதரவு வழங்கிச் சிறப்பிக்கும் .








All the contents on this site are copyrighted ©.