2009-01-07 13:55:09

தாக்குதல்களில் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் சிகிச்சை பெற உதவும் வண்ணம் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் இடம்பெற சர்வதேச சமுதாயம் வலியுறுத்த வேண்டும்


ஜன.07,2009. தாக்குதல்களில் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் சிகிச்சை பெற உதவும் வண்ணம் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் இடம்பெற சர்வதேச சமுதாயம் வலியுறுத்த வேண்டும் என கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலின் காரணமாக அப்பாவி மக்களிடையே சென்று பணிபுரிய முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களின் துன்பம் அதிகரித்துள்ளதாகக் கூறும் சர்வதேச காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, அப்பாவிக் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் தடுக்கப்பட வேண்டும் என மேலும் அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

மேலும், பாலஸ்தீனாவிலுள்ள கிறிஸ்தவ நிறுவனங்களின் அழைப்பை ஏற்று பல கிறிஸ்தவர்கள் மெழுகுதிரிகளைத் தாங்கியவர்களாய் அமைதிக்கான செபவழிபாட்டில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனாவில் இஸ்ரேலின் ஆக்ரமிப்பு முடிவுக்கு வரவேண்டும் என்ற அழைப்புடன் இடம்பெற்ற திருவழிபாட்டில் கிரேக்கம், அர்மீனியம், சிரியக், அபிசினியன், இத்தாலியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன் என ஏழு வெளிநாட்டு மொழிகளில் செபம் இடம் பெற்றது.

பகைமைக்கு மறுப்பு சொல்லி, அன்புக்கு ஆம் சொல்லவும், மரணத்திற்கு மறுப்புக் கூறி வாழ்வுக்கு ஆம் சொல்லவும் செபிக்குமாறும் இவ்வழிபாட்டில் அழைப்புவிடுக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.