2009-01-07 13:57:37

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்தில் மேலும் கட்டுப்பாடுகள் புகுத்தப்பட வேண்டும் எனப் பெரும்பான்மை அமெரிக்க ஐக்கிய குடியரசு மக்கள் விரும்புகின்றனர்


ஜன.07,2009. கருக்கலைத்தலை அனுமதிக்கும் சட்டத்தில் மேலும் கட்டுப்பாடுகள் புகுத்தப்பட வேண்டும் எனப் பெரும்பான்மை அமெரிக்க ஐக்கிய குடியரசு மக்கள் விரும்புவதாக அந்நாட்டில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கருக்கலைத்தல் சட்டத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வேண்டும் என அமெரிக்க ஐக்கிய குடியரசில் ஐந்துக்கு நான்கு பேர் அதாவது எண்பது விழுக்காட்டினர் விரும்புவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கருக்கலைத்தல் என்பது எல்லாச் சூழலிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என ஒன்பது விழுக்காட்டினரே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஆயர் பேரவையில் பன்வலைத் தொடர்பகம் மூலம் எடுக்கப்பட்ட இவ்வாய்வு வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் அமெரிக்க ஐக்கிய குடியரசு மக்களின் ஆர்வத்தின் புது வெளிப்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.