2009-01-07 19:08:34

எங்கே நிம்மதி - மன நலமே உடல் நலம் – 07, ஜனவரி ,09 .


மனிதர்களாகிய நாம் சிறையில் மாட்டிக்கொண்டிருக்கும் தூய ஆவிகளோ , தேவதூதர்களோ அல்ல . 100 ரூபாய் பெறுமானமுள்ள உ.யர்ரக வேதிக்கலவையால் ஆனவெற்றுப் பொருளல்ல நாம் . நாம் நினைப்பது போல அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல . உடல் , மனம் , ஆன்மா எனும் இம்மூன்றும் ஒருங்கிணைந்திருக்கும் ஆச்சரியப்படத்தக்க பிரமாண்டமான ஒருமையே நாம் . நம் சிந்தனையையும் தேர்ந்தெடுத்தலையும் நம் உடல் பாதிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள நமக்குத் தயக்கமாய் இருக்கிறது . அதுபோல உடலின்மீதான தங்களது திட்டங்களை மனமும் ஆன்மாவும் சேர்ந்து அதன்மேல் செயல்படுத்துகின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் . உடல் மனம் ஆன்மாவின் ஒருமையையும் பிணைப்பையும் நாம் மறுக்கப் பார்க்கிறோம் .



திரிக்கப்பட்ட மனமும் இழப்புக்குட்பட்ட ஆன்மாவும் நம்மை உடல் நோயாளிகளாக்கலாம் என்பது ஒரு முக்கியமான உண்மை . ஒரு சிறிய தலைவலி நமக்கு ஏதோ மறுக்கப்பட்டதன் கவலையினாலோ மனதில் ஊனமான எண்ணத்தின் விளைவாகவோ இருக்கலாம் என்ற சிந்தனை நம்மை சிரிக்கச் செய்கிறது . ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது ஒரு உண்மை . மிக மென்மையாகப் பிணைக்கப்பட்டிருக்கும் மூன்று பகுதிகளின் புரிந்துகொள்ள முடியா ஒருமைதான் நாம் . மனத்தின்மீதும் ஆன்மாவின் மீதும் உடலின் தாக்கம் இருக்கிறது . மனம் உடலையும் ஆன்மாவையும் பாதிக்கிறது .ஆன்மாவோ உடலையும் மனத்தையும் பாதிக்கிறது . எனவே நம் உடலைக் கவனிப்பது என்பது நம் மனத்தையும் ஆன்மாவையும் மறைமுகமாய் கவனித்துக் கொள்வதாகும் .ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்விற்கு இப்படிப்பட்ட கவனிப்பு எப்போதும் அவசியமாகிறது .

நம் நோய்கள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்டவையல்ல என்று மருத்துவர்கள் நமக்குச் சொல்கிறார்கள் . வேறு விதமாய் சொன்னால் நம்முடைய உடலில் இருக்கும் வலி மனதால் தூண்டப்பட்டதே . மறுபக்கத்தில் வேதிப்பொருட்களின் சமநிலையின்மை , அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறை இவற்றின் காரணமாகத்தான் மனச்சோர்வு உண்டாகிறது என்று உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர் . இறையியல் வல்லுநர்கள் மனிதனுடைய துன்பங்களுக்குக் காரணம் இறைவன் தரும் சோதனையல்ல . மாறாக மனிதனாய் இருப்பது என்றால் என்னவென்று தெரியாததாலும் தவறாய் புரிந்துகொண்டதாலும் ஏற்படுவதே என்று கூறுகின்றனர் . நம் ஆன்மீக வழிகாட்டிகளோ நம் சிறுவயதில் நாம் பதிப்பித்துக்கொண்ட அந்தத் திட்டங்களையும் பதிவுகளையும் நோக்கிப் போகவேண்டி இருக்கிறது . நம் ஆன்மீகப் பிரச்சனைகளுக்கு மூலகாரணம் ஒருவேளை இந்தச் சிறுவயதுப் பதிவுகளில் இருக்கலாம் .

உடல் மனம் ஆன்மா இவற்றுக்கிடையேயான பிணைப்பானது , இப்பகுதிகளில் ஏதாவதொன்றில் ஒரு பிரச்சனை என்றால் அது மற்ற பகுதியிலும் தெரியவர வாய்ப்பாகிறது . ஒரு தவறான பார்வை தலைவலியை உண்டாக்கலாம் . சத்தற்ற உடல்நிலை மனச்சோர்வுக்குக் காரணமாக இருக்கலாம் . மனித ஆன்மாவில் நிறைவு செய்யப்படாத பசிகள் நம் உடலிலும் மனத்திலும் உள்ள நோய்களில் வெளிப்படலாம் .



நாம் நிம்மதியாக இருக்க இம்மூன்று பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டும் . இம்மூன்றின் தேவைகளும் நிறைவு செய்யப்பட்டால் ஒழிய யாராலும் உண்மையாகவே நிம்மதியாக இருக்கமுடியாது . தேவையான ஓய்வு , பயிற்சி , சத்தான உணவு இவற்றோடு நம் உடலில் முக்கியப் பகுதிகளாக இருக்கும் மனம் ஆன்மா இவற்றின் நலமும் இணைந்து நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத் தரும் . ஆரோக்கியமாக வாழ்வதே நிம்மதிக்கு வழியாகும் .








All the contents on this site are copyrighted ©.