2009-01-03 15:49:46

அமெரிக்க ஐக்கிய குடியரசு தலத்திருச்சபை ஜனவரி 4-10 வரை தேசிய குடியேற்றதாரர் வாரத்தைக் கடைபிடிக்கிறது


ஜன.03,2009. அமெரிக்க ஐக்கிய குடியரசில் சரியான ஆவணங்களின்றி வாழும் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் குடியேறிகள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டுத் தலத்திருச்சபை இஞ்ஞாயிறன்று தேசிய குடியேற்றதாரர் வாரத்தைத் தொடங்குகிறது.

ஜனவரி 4-10 வரை கடைபிடிக்கப்படும் இத்தேசிய வாரத்தில் குடியேற்றதாரர் குறித்த சட்டம் முழுவதுமாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அமெரிக்க ஐக்கிய குடியரசில் மனித வியாபாரத்திற்கெதிராய்க் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திற்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் அவைத் தலைவர் ஆயர் ஜான் வெஸ்ட்டர்.

மனிதரை வியாபாரம் செய்வது கொடூரமான குற்றம், இது அனைத்துவிதமான சட்டங்களாலும் தடை செய்யப்பட வேண்டும் என்று ஆயர் வெஸ்ட்டர் கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் அவையால் கடந்த டிசம்பர் பத்தாம் தேதி அங்கீகரிக்கப்பட்ட மனித வியாபாரத்திற்கெதிரான மசோதாவில் அதிபர் புஷ் டிசம்பர் 23ம் தேதி கையெழுத்திட்டு அதனைச் சட்டமாக்கினார்.








All the contents on this site are copyrighted ©.