2009-01-02 15:59:03

ஹயிட்டி நாட்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அமெரிக்கக் கத்தோலிக்க அமைப்பு உதவுகிறது . 020109 .


போம்பானோக் கடற்கரையில் அமைந்துள்ளது அகில உலகக் கிராஸ் தொண்டு நிறுவனம் . ஹயிட்டி நாட்டில் எய்ட்ஸ் நோய் பரவாதிருக்க அமெரிக்க அரசிடமிருந்து 48 இலட்சம் டாலர்களை உதவியாகப் பெற்றுள்ளது . இது அந்நாட்டில் உள்ள அனாதைகளுக்கும் , குழந்தைகளுக்கும் உதவிடவும் பயன்படுத்தப்படவுள்ளது . இது மிகப் பெரிய தொகையென்றும் , கிராஸ் நிறுவனத்தின் அருமையான சேவையை இது பாராட்டுவதாக உள்ளது என்றும் அகில உலகக் கிராஸ் தொண்டு நிறுவனத் தலைவர் ஜிம் கவ்னார் தெரிவித்துள்ளார் . அமெரிக்காவின் தலைவர் ஜார்ஜ் புஷ் எய்ட்சுக்கான பெப்பார் என்ற நிதி உதவி அமைப்பை 2003 ஆம் ஆண்டு துரிதப்படுத்தியதாகவும் , இதுவரை 1900 கோடி டாலர்களை உதவித் தொகையாக பல நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .







All the contents on this site are copyrighted ©.