2009-01-02 15:55:23

காஜாப் பகுதியில் போரை நிறுத்த அமெரிக்கா உதவுமாறு ஆயர் கோரிக்கை.0201.


அமெரிக்க ஆயர் குழுவின் நீதி மற்றும் அமைதி மன்றத்தின் தலைவர் நியூயார்க்கின் பேராயர் ஹோவார்டு ஹப்பர்ட் அமெரிக்க வெளியுறவுச் செயலர் காண்டாலீசா ரைஸிடம் ஹமாசுக்கும் , இஸ்ராயேலுக்குமிடையே நடக்கும் வன்முறை அதிகரிப்பதைத் தவிர்க்க உடனடியாக அமெரிக்கா தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் . டிசம்பர் 31 ஆம் தேதி இஸ்ராயேல் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது . ஆனால் அதன் அரசியல் அலுவலர்கள் அமெரிக்காவோடும் , ஐரோப்பியக் கூட்டமைப்போடும் அங்கு நிரந்தரமான தீர்வுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதற்கு தடை விதிக்காது என இஸ்ராயேல் அரசு கூறியுள்ளது . அங்குச் சாவு எண்ணிக்கை அதிகரிப்பதையும் , மக்கள் துயரப்படுவதையும் அமைதிப்பேச்சு தொடராது இருப்பதையும் தவிர்க்கவேண்டும் என ஆயர் ஹோவர்ட் காண்டலீசா ரைசிடம் கேட்டுக் கொண்டுள்ளார் .

 








All the contents on this site are copyrighted ©.