2008-12-30 15:20:21

காஸாவில் இடம் பெறும் வன்முறையைக் கண்டித்துள்ளார் உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர்


டிச.30,2008. காஸாவில் இடம் பெறும் வன்முறையைக் கண்டித்துள்ள அதேவேளை, இதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு அப்பகுதியின் மற்றும் வெளிநாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பாஸ்டர் சாமுவேல் கோபியா.

காஸாவில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் ஏற்பட்டுள்ள இறப்புகளும் துன்பங்களும் கொடுமையானவை மற்றும் வெட்கத்துக்குரியவை என்று தனது அறிக்கையில் கூறியுள்ள பாஸ்டர் கோபியா, ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மனிதாபிமானத்துடனும் சர்வதேச மனித உரிமைகளை மதித்தும் நடக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இஸ்ரேல் இராணுவ தாக்குதலை நடத்துவது, காஸாவில் ஏற்கனவே இருந்து வரும் நெருக்கடி நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்று அவரின் அறிக்கை எச்சரிக்கிறது.

இன்னும், தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் அழைப்புவிடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.