2008-12-30 15:20:32

2008ம் ஆண்டில் உலகு இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது-மியூனிச் ரே


டிச.30,2008. உலகு, குறிப்பாக ஆசியா 2008ம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது என்று உலகின் மிகப்பெரிய ஆயுள்காப்பு நிறுவனங்களில் ஒன்றான மியூனிச் ரே அறிவித்தது.

இவ்வாண்டில் ஆசியா இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் மியான்மாரில் ஏற்பட்ட நர்கீஸ் கடும் புயலில் 1,30,000பேர் இறந்தனர் எனவும் மியூனிச் ரே கூறியது.

2008ம் ஆண்டில் இயற்கைப் பேரிடர்களால் உலகில் ஏறத்தாழ 20,000 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது என்றுரைக்கும் அந்நிறுவனம், இது 2007ம் ஆண்டைவிட ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு அதிகம் என்றும் கூறியது.

உலக வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்புகள் அதிகமாகியுள்ள வேளை, கார்பன்டைஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு உலகத் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்குமாறும் அந்த ஆயுள்காப்பகம் கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.