2008-12-29 14:54:51

டிசம்பர் 30 – புனிதர் சபினுஸிம் அவரது தோழர்களும்


உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய காலத்தில் ஆயராக இருந்த சபினுசும் பல குருக்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் முன்னர் வைக்கப்பட்ட ஜூபிட்டர் சிறிய சிலையை வணங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆயர் சபினுஸ் மிகுந்த வெறுப்புடனும் ஏளனத்துடனும் அதனைக் கீழே தள்ளி விட்டார். அச்சிலையும் உடைந்தது. இதனால் ஆத்திரப்பட்ட ஆளுனன் வெனுஸ்தியன் புனித ஆயருடைய கரங்களைத் துண்டிக்குமாறு கட்டளையிட்டான். அவரோடு சேர்ந்து மார்செலுஸ், எக்ஸூபெராந்தியுஸ் ஆகிய இரண்டு தியாக்கோன்களும் வேதத்தில் உறுதியாயிருந்தனர். எனவே அனைவரும் கட்டி அடிக்கப்பட்டனர். இதில் அவர்கள் இறந்தனர். அவர்களது உடல்கள் அசிசியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. புனித ஆயர் சபினுஸ் கைகளின்றி சிறையில் இருந்த போது செரேனா என்ற விதவையின் பார்வையற்ற மகனுக்குப் பார்வை அளித்திருக்கிறார்.

இதேநாளில் திருத்தந்தை புனித முதலாம் பெலிக்ஸின் விழாவும் சிறப்பிக்கப்படுகின்றது.

சிந்தனைக்கு – பயப்படும் மனிதன் இன்னும் வாழத் தொடங்கவில்லை என்று அர்த்தம்







All the contents on this site are copyrighted ©.