2008-12-29 20:49:43

இஸ்ராயேல் காஜா பிரச்சனை , 29 டிச. 08


மூன்றாவது நாளாக இஸ்ராயேல் காஜாவைத் தாக்கியுள்ளது. 300 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் எனத் தெரிகிறது . படைத்துறை சாராத பொதுமக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் . அரபு நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன . உலகின் பல நாடுகளும் தாக்குதலை நிறுத்துமாறு கூறியுள்ளனர் . பாலஸ்தீன நாட்டிலேயே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன எனத் தெரிகிறது . காஜாப் பகுதியில் இஸ்ராயேல் படைகளைக்குவித்து வருவதாகத் தெரிகிறது . இந்தப் போருக்குக் காரணம் காஜாப்பகுதியிலிருந்து தொடர்ந்து இஸ்ராயேலைக் குறிவைத்து இம்மாதம் 27 ல் தாக்குதல் நடந்ததாகவும் , ஒரு இஸ்ரயேலர் கொல்லப்பட்டதாகவும் அதற்குப் பதிலாகத் தாக்குதலைத் தொடங்கிய காமாஸ் குழுவினரைக் குறிவைப்பதாகவும் கூறுகிறது இஸ்ராயேல் . ஐ .நா பொதுச் செயலர் பாங்கிமூன் இஸ்ரேல் காஜாப்பகுதிக்கு உதவி நிவாரணப்பணிகளையும் செய்யவிடாது தடுப்பதாகவும் உதவிப் பொருட்கள் அங்குச் செல்வதற்கு வழிவிட வேண்டும் எனவும் கூறி 30க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் தேவையான உதவிப் பொருள்களை அனுப்பி வருகிறது .








All the contents on this site are copyrighted ©.