2008-12-29 20:46:17

ஆங்கில அரசின் கொள்கைகளை தட்டிக் கேட்கின்றனர் ஆங்கிலிக்கன் ஆயர்கள் . 29, டிசம்பர்


ஆங்கில அரசின் கொள்கைகளை தட்டிக் கேட்கின்றனர் ஆங்கிலிக்கன் ஆயர்கள் . ஆங்கிலேய நாடு குடும்பச் சீர்குலைவு ,கடன் தொல்லை , மற்றும் வறுமையால் துயருறுவதாக ஆங்கில ஆயர்கள் கூறியுள்ளனர் . துர்காம் , கார்லைல் , கல்மே , மான்செஸ்டர் , வின்செஸ்டர் , ஆகிய 5 மறைமாவட்டங்களின் ஆயர்கள் நன்னெறிக்கோட்பாடுகள் பண ஆசையால் மோசமடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர் . செல்வந்தர் செல்வத்தைக் குவிப்பதும் ஏழைகள் வறுமைக்குத் தள்ளப்படுவதும் நம்பிக்கையில்லா நிலைமையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் . இதனைக் கடந்த வாரம் வர்ணித்த காண்டர்பரிப் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர் மீண்டும் போதைப் பொருளைத் தேடிச் செல்வது போல ஆங்கிலேயப் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக தவறான போக்கில் போய்க்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.