2008-12-27 14:10:45

டிசம்பர் 29 – புனித தாமஸ் பெக்கட்


1119இல் இலண்டனில் வணிகக் குடும்பத்தில் பிறந்த தாமஸ், இலண்டனிலும் பாரிசிலும் கல்வி பயின்றார். இளவரசனின் தோழனாக இருந்த இவருக்கு, அந்தத் தோழனே 2ம் ஹென்றி என்ற அரசனான பின்னர் அரசவையில் துணைவேந்தர் பதவி கிடைத்தது. 1126இல் காண்டர்பரி பேராயரானார். உடனே துணைவேந்தர் பதவியைத் துறந்தார். திருச்சபையின் நிர்வாகத்தில் அரசனுக்கு இடமில்லை என்றும் கோவில் சொத்துக்களை அரசன் தொடக் கூடாது என்றும் சொன்னார். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் ஆலயக் கடமைகளில் தலையிடவே இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. ஒருமுறை அரசன், இந்தத் தொல்லை பிடித்த குருவை வெட்டி வீழ்த்த யாருமே இல்லையா என முழங்கினார். இதைக் கேட்ட படை அலுவலகன் ஒருவன் பேராயர் தாமஸ் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவரை வெட்டி வீழ்த்தினான். இவர் பிரான்ஸில் இருந்த போது தனது பழைய பாவங்களை நினைத்து கடும் தவம் புரிந்தார். இவர் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த போது இவர் பயன்படுத்திய முள் ஒட்டியாணம் முன்பு இருந்தே இவரது உடலைக் குத்திக் கொண்டிருந்த நிலையில் பிரித்தெடுக்கப்பட்டது.

சிந்தனைக்கு- கடவுளுக்காக நாம் மேற்கொள்ளும் போர்க்களத்தில் உலகம் அறியாத அமைதியை சுவைக்கிறோம்.








All the contents on this site are copyrighted ©.