2008-12-26 14:01:30

கந்தமாலில் காவல்துறையின் கடும் பாதுகாப்பின்கீழ் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பிக்கப்பட்டது


டிசம்.26.2008. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட கந்தமால் மாவட்டத்தில் காவல்துறையின் கடும் பாதுகாப்பின்கீழ் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பிக்கப்பட்டதாக தலத்திருச்சபை அதிகாரிகள் கூறினர்.

ஒரிசா மாநிலமெங்கும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் குறைந்தது நாற்பது ஆலயங்கள் மற்றும் செப அறைகளில் பாரம்பரியக் கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலிகளும் மாலை ஆலய வழிபாடுகளும் நடந்தன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கந்தமாலில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டுக் கிறிஸ்தவர்கள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் இவ்விழாக் காலத்தில் ஏறக்குறைய எல்லாப் பங்குகளுமே மக்களின்றி இருந்தன.

எனினும் குறைந்தது பத்தாயிரம் கிறிஸ்தவர்கள் வாழும் சுமார் பத்து நிவாரண முகாம்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பிக்கப்பட்டதாக தலத்திருச்சபை அதிகாரிகள் கூறினர்.

 








All the contents on this site are copyrighted ©.