2008-12-22 16:48:48

டிசம்பர்23 – திருவருகைக்காலச் சிந்தனை


கருத்தாங்க இயலாதிருந்த எலிசபெத் கடவுள் கருணையால் கருத்தாங்கி ஒரு மகனையும் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும் என்றார். பின்னர் அவர்கள் ' குழந்தையின் தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது;

அன்பர்களே, திருமுழுக்கு யோவானின் பெயர் சூட்டும் நிகழ்வு பற்றி லூக்கா நற்செய்தியாளர் எழுதியுள்ளதைக் கேட்டோம். பெயர் சூட்டும் விழா எல்லாச் சமயங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. செக்கரியாவும் எலிசபெத்தும் கடவுள் இட்ட பெயரைத் தஹ்கள் மகனுக்குச் சூட்டினர். கடவுளுக்கு விருப்பமானதைச் செய்ததால் செக்கரியாவுக்கு நா கட்டவிழ்க்கப்பட்டுப் பேசத் தொடங்கி கடவுளைப் போற்றினார். நாம் நமது குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர் எத்தகையது? வாழ்வில் உயர்வதன் விலை பொறுப்புடன் நடந்து கொள்வதே என்பதை நினைவில் கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.