2008-12-22 20:23:52

கடத்திச் செல்லப்பட்ட அருள் சகோதரிகளை மீட்பதற்கு இத்தாலிய அரசு தூது அனுப்புகிறது . 22 , டிசம்பர் .


இவ்வாண்டு நவம்பர் 9 ஆம் தேதி கென்யாவின் எல்வாக் என்னுமிடத்தில் சோமாலிப் பகுதியில் சகோதரி மரிய தெரசாவும் , சகோதரி கத்தரீனா ஜிரோடோவும் கடத்திச் செல்லப்பட்டனர் . அவர்களை மீட்டுவரும்படி இத்தாலிய அரசுக்கு எக்குவிப்பஸ் நோட்டர்டாம் என்ற இயக்கம் மூவாயிரத்துக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று இத்தாலிய அரசு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுமாறு கேட்டிருந்தது . பயங்கர ஆயுதங்களோடு கடத்திச் சென்ற தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுவர இத்தாலிய அரசு தூதுவர்களை அனுப்பியுள்ளதாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் பிரான்கோ பிராட்டினி இம்மாதம் 19 ஆம் தேதி தெரிவித்துள்ளார் . சகோதரி கத்தரீன் ஜிராடோ , வயது 67 , மரிய தெரசா ஒலிவேரோ வயது 61 மற்றும் அவர்கள் கார் ஓட்டுனரும் சோமாலியா எல்லையின் எல்வாக் கிராமத்திலிருந்து கடத்தப்பட்டார்கள் . சகோதரிகள் வடக்கு இத்தாலியின் துறவறச் சபையைச் சேர்ந்தவர்கள் . கென்யாவிலிருந்து வரும் செய்திகள் சகோதரிகள் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன .








All the contents on this site are copyrighted ©.