2008-12-22 16:44:30

ஏழ்மையும் அநீதிகளும் மோதல்களும் காணப்படும் இவ்வுலகில் இளையோர் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நம்பிக்கையின் விதைகளை விதைக்க வேண்டும் - திருத்தந்தை


டிச.22,2008. டிசம்பர் 29 முதல் ஜனவரி 2 வரை பெல்ஜியத்தின் பிரசல்ஸில் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு ஏற்பாடு செய்துள்ள ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கென செய்தி ஒன்றையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.

இந்த இளையோர் மாநாட்டு பிரதிநிதிகளுக்குள்ளேயே நாம் எந்த ஆதாரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும் என்று தமது செய்தியில் கேட்டுள்ள அவர், ஏழ்மையும் அநீதிகளும் மோதல்களும் காணப்படும் இவ்வுலகில் இளையோர் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நம்பிக்கையின் விதைகளை விதைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இம்மாநாட்டில் ஐரோப்பாவிலிருந்து நாற்பதாயிரம் இளையோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கென ஐ.நா. பொதுச் செயலர், இங்கிலாந்து ஆங்கிலக்கன் பேராயர் எனப் பல பிரமுகர்கள் தங்களது செய்திகளை அனுப்பியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.